"இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது.." - அதிரடி அறிவிப்பு
தலைநகர் டெல்லியில் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கண்காணிக்க டெல்லி போலீஸ் தனிப்பட்ட போக்குவரத்து குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழு 24 மணி நேரமும் அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.