கடலில் வலை வீசும் படலம்.. மகிழ்ச்சியுடன் கண்டு களித்த மக்கள்

Update: 2025-05-13 02:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கடலில் வலைவீசும் படலம் கோலாகலமாக நடைபெற்றது...

பூவேந்திய நாதர் சிவன் கோவில் மன்னார் வளைகுடா கடற்கரை அருகே அமைந்துள்ளது... சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் திருவிளையாடல் புராணத்தில் வரக்கூடிய சிவன், பார்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலம் மற்றும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்