``இந்தியாவில் உளவு பார்த்த பாக்.,’’ 8 மாநிலங்களில் இறங்கிய NIA

Update: 2025-06-01 02:25 GMT

Pakistan Spy Case | ``இந்தியாவில் உளவு பார்த்த பாக்.,’’ 8 மாநிலங்களில் இறங்கிய NIA

பாகிஸ்தானுக்கு உளவு - 8 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, 8 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 20-ஆம் தேதி பதிவு செய்த வழக்கு தொடர்பாக, டெல்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனைகளின்போது, ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், பண பரிமாற்ற ரசீதுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்