BSF வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான்

Update: 2025-05-14 11:28 GMT

பாகிஸ்தான் எல்லையில் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு வீரர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த மாதம் 23-ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூர்னம் குமார் ஷா, தவறுதலாக எல்லை கட்டுப்பாடு கோட்டை கடந்து பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அவரை பாகிஸ்தான் படையினர் கைது செய்து தங்கள் காவலில் வைத்திருந்தனர். இந்நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், பஞ்சாப்பில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்திய தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்