operationsindhoor | modi``அப்படியொரு அரசியல் தெளிவை முதல்முறையாக கண்டோம்’’
ஆபரேஷன் சிந்தூரில், சதுரங்கம் போன்று விளையாடி எதிரியை செக் அண்ட் மேட் செய்ததாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி Upendra Dwivedi தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில்,
மறுநாளே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முப்படைத் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும், பதிலடி கொடுக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுமாறு தங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அந்த மாதிரியான நம்பிக்கை மற்றும் அரசியல் தெளிவை தாங்கள் முதன்முறையாக கண்டதாகவும்,
அதுதான் மன உறுதியை அதிகரித்தது...திறம்பட செயலாற்ற உதவியது....இதனால் ஏராளமான பயங்கரவாதிகளை கொன்றதாக குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் நாட்டையே இணைத்து மக்களை உற்சாகப்படுத்தியதாக உபேந்திர திவேதி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில், தாங்கள் சதுரங்கம் விளையாடியதாகவும், எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்ன செய்யப்போகிறோம் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும், இறுதியில் செக் அண்ட் மேட்டை கொடுத்ததாகவும் உபேந்திர திவேதி குறிப்பிட்டார்.