பாக்.யை சிதறடித்த வீர மங்கை | பூரிப்பில் பெற்றோர் சொன்ன சிறு வயது ஆசை

Update: 2025-05-08 12:40 GMT

தங்கள் மகள் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாக, கர்னல் சோஃபியா குரேஷியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பெண் வீராங்கனைகளும் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் 2 பெண் அதிகாரிகளுக்கும் வாழ்த்து மற்றும் பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், தங்கள் மகள் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளதாக சோஃபியா குரேஷியின் தந்தை தாஜ் முஹமது குரேஷி மற்றும் தாயார் ஹலிமா குரேஷி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிறு வயதிலிருந்தே தனது மகளுக்கு ராணுவத்தில் சேர்வதே ஆசையாக இருந்ததாக தெரிவித்துள்ள ஹலிமா குரேஷி, நமது தாய்மார்களின் குங்குமத்தை அழித்தவர்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்