"ஆபரேசன் சிந்தூர் - நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்" - கிரண்ரிஜிஜு

Update: 2025-07-20 15:12 GMT

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆப்ரேசன் சிந்தூர் பற்றி விவாதிக்க அரசு தயார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆப்ரேசன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றார். மேலும், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என வேண்டுகோள் விடுத்தார்.

நீதிபதி வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்குவது குறித்து நாடாளுமன்ற BAC குழு ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்