ஒத்துவராத Ola,Uber... தன்னைத் தானே Porterல் டெலிவரி செய்த நபர்... மிரண்ட Tech உலகம்
போர்டர் டெலிவரி செயலியில் தன்னைத் தானே இளைஞர் அலுவலகத்தில் டெலிவரி செய்து கொண்ட விநோத சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது... பணிக்குக் கிளம்பும்போது ஓலா, ஊபரில் Cab புக் செய்ய முடியாததால் விரக்தி அடைந்த பதிக் குகாரே என்ற இளைஞர் போர்டர் டெலிவரி ஆப்-ல் புக் செய்து தன்னைத் தானே அலுவலகத்தில் டெலிவரி செய்துள்ளார்... இவர் தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்த நிலையில், என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று இணையவாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.