உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மரபுப்படி அடுத்த மூத்த நீதிபதியான பி.ஆர். கவாயை தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நீதிபதி பி.ஆர்.கவாயை அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய்க்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.