குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள நீர் வெளியேற முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.