புதுச்சேரியில் பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது ஆதரவாளர்கள் எடுத்த கடைசி நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாஜக
நிர்வாகியான உமாசங்கர் முன் விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் கொலை செய்ய படுவதற்கு முன்னதாக அவரது ஆதரவாளர்கள் எடுத்த வீடியோவில், கொலையாளிகள் "வெட்டுடா" என ஆவேசமாக கூறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது