Maharashtra | Politics | 20 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த முக்கிய புள்ளிகள்.. அனல் பறக்கும் அரசியல் களம்

Update: 2026-01-12 06:30 GMT

மும்பை மாநகராட்சித் தேர்தலையொட்டி சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த அவர்கள், ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்திருப்பதால், மகாராஷ்டிர அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரசாரத்துக்குப் பின் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவிடத்தில் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்