Amitshah | ``விரைவில் `பாஜகவை’ சேர்ந்தவர் முதல்வர்’’ - அமித்ஷா அறிவிப்பு
கேரளாவில் விரைவில் பாஜகவை சேர்ந்தவரை முதல்வராக அமர வைப்பதை நோக்கி செயல்பட வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இந்த ஆண்டு நிச்சயம் கேரளாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கடந்த 2003ஆம் ஆண்டு கேரளாவில் பாஜகவின் வாக்கு சதவீதம் மூன்றாக இருந்ததையும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது 20 சதவீதமாக உயர்ந்திருந்ததைவயும் சுட்டிக்காட்டிய அவர் , நிச்சயம் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 40 ஆக உயரும் என்றும் பேசியுள்ளார்