வயநாடு பேரிடரை சுட்டிக்காட்டி, முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி மேத்யூ நெடும்பறா என்ற வழக்கறிஞர், பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, மேலூரை சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின் பாஸ்கரன் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.