பெற்ற மகனே எமனாக மாறிய கொடூரம்... ரத்த வெள்ளத்தில் துடித்து நின்ற தாய் மூச்சு
கேரளாவில் போதையின் உச்சத்தில் இருந்த மகன், படுத்த படுக்கையாக கிடந்த தாயை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுபைதா என்ற பெண் மூளைக்கட்டி நோயால் அவதிப்பட்ட நிலையில், சிகிச்சைக்கு பின் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். போதைப் பொருளுக்கு அடிமையான சுபைதாவின் மகன் ஆஷிக், பெங்களூருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்து வீடு திரும்பிய ஆஷிக், போதையின் உச்சத்தில் தாய் என்றும் பாராமல், வெட்டுக்கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற ஆஷிக்கை, அங்கிருந்த மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சுபைதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.