கும்பமேளா கண்டறிந்த பேரழகி மோனலிசாவிற்கு அடித்த ஜாக்பாட் | Monalisa | Kumbh mela

Update: 2025-01-31 02:20 GMT

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பாசிமணி விற்று வைரலான மோனலிசா என்ற இளம்பெண், பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பாலிவுட் இயக்குநரான சனோஜ் மிஸ்ரா, மத்தியப்பிரதேசத்தில் உள்ள மோனலிசாவின் வீட்டிற்கு சென்று, 'Diary of Manipur' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். சமூக ஊடகங்களில் மோனலிசாவின் வைரல் வீடியோக்களை பார்த்து, தனது படத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளதாக சனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கு முன் மோனலிசாவுக்கு 3 மாதங்கள் மும்பையில் நடிப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், சனோஜ் மிஸ்ரா வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்