மெட்ரோவில் பறந்த இதயம்.. 13ம் நம்பரால் திரும்பி வந்த உயிர்.. மருத்துவ உலகை அதிசயிக்க விட்ட காட்சி
இதுவரை ஆம்புலன்ஸ், விமானங்கள் வாயிலாக மாற்று உறுப்புகள் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் சென்று பார்த்திருப்போம்.. ஆனால் சற்றே வித்தியாசமாக அதி விரைவாக மெட்ரோ ரயிலில் இதயம் எடுத்துச் செல்லப்பட்டது பாராட்டுகளைப் பெற்றுள்ளது...
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயத்தைக் கொண்டு செல்ல பசுமை வழித்தடம் அமைத்து அசத்தியது ஐதராபாத் மெட்ரோ... எல்.பி.நகரின் காமினேனி மருத்துவமனையிலிருந்து லக்டி-கா-புல்லில் உள்ள க்ளீனிகிள்ஸ் குளோபல் மருத்துவமனைக்கு இதயமானது கொண்டு செல்லப்பட்டது... ஐதராபாத் மெட்ரோ நிறுவனம், மருத்துவர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பால் வெற்றிகரமாக 13 கிலோமீட்டர் தூரத்தை 13 ரயில் நிறுத்தங்களைத் தாண்டி வெறும் 13 நிமிடங்களில் கடந்து மெட்ரோ ரயிலில் இதயமானது எடுத்துச் செல்லப்பட்டது...