Mehul Choksi Special Jail Cell | 2 ரூம், 3 பேன், தனி பாத்ரூம் - VIP-க்கு தயாராகும் `ஸ்பெஷல்’ சிறை
இந்தியா வரும் மெகுல் சோக்சிக்காக பிரத்யேக சிறை வார்டு
தொழிலதிபர் மெகுல் சோக்சியை, இந்தியா அழைத்து வருவதற்காக மும்பையில் பிரத்யேக சிறை வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேசனல் வங்கியில் பதிமூனாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு பெல்ஜியமில் தலைமறைவாக இருந்த மெகுல்சோக்சியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்
மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என பெல்ஜியம் நீதிமன்றத்தில் இந்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது.
இதற்கு, இந்திய சிறைகள் மோசமாக உள்ளதாகவும், இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் மெகுல் சோக்சி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை கருத்தில் கொண்ட இந்திய அரசு, மும்பை ஆர்த்தர் ரோடு சிறைச்சாலையில் மெகுல் சோக்சிக்காக பிரத்யேக சிறை வார்டை அமைத்தது.
இந்த வார்டில் இரண்டு அறைகள், மூன்று மின் விசிறிகள், விளக்குகள், ஜன்னல்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டது.