ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவில் இருந்து வந்த நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில், தனது 9 வயது சிறுமியுடன் ஒரு நபர் பயணித்தார்.. அப்போது, உறங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்தார். இதனால், சிறுமி கூச்சலிட்டதால், அங்கிருந்து தப்பித்து Reservation பெட்டியில் பதுங்கி இருந்த குமாரை, TTR உள்ளிட்டோர் உதவியுடன், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.