சிகரெட் வாங்கி தர மறுத்தவரை கார் ஏற்றி கொலை செய்த நபர் - குலைநடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2025-05-18 04:47 GMT

 பெங்களூருவில் சிகரெட் வாங்கி தர மறுத்தவரை வாகனம் ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருரின் கோனனகுண்டே பகுதியில் வசிக்கும் மென்பொறியாளர்களான சஞ்சய் மற்றும் சேத்தன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு காரில் வந்த பிரத்திக் என்பவர், காரில் இருந்தபடியே பணத்தை சஞ்சயிடம் கொடுத்து சிகரெட் வாங்கி கொடுக்குமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சஞ்சய் நீயே இறங்கிவந்து வாங்கிக்கொள் என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் சஞ்சய் மற்றும் சேத்தன் ஆகியோர் ஒரு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டபோது, அவர்களை பின் தொடர்ந்து காரில் சென்ற பிரத்திக் ஒரு சாலை வளைவில், சஞ்சயின் பைக் மீது மோதியுள்ளார். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்த சஞ்சய் மற்றும் மீது மீண்டும் காரை ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றார்.

படுகாயமடைந்த சஞ்சய் மற்றும் சேத்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சஞ்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்