மகாராஷ்டிராவில் ரங்கோலியால் வெடித்த வன்முறையில் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அஹில்யாநகரில் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இஸ்லாம் சமூகத்தினருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வகையில் ரங்கோலி வரைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் சிலர் கற்களை தூக்கி எறிந்ததால் அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர்.இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின்னால் ஏதேனும் சதி இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட இருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.