உத்தர பிரதேச மாநிலம் ஹார்தோயில் போக்குவரத்து போலீஸ்காரர் மீது மோதிய லாரிக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, எந்த விதமான ஒலியும் எழுப்பாமல் சாலையின் நடுவே நின்ற போக்குவரத்து காவலர் மீது மோதியது. இதனால் சற்று நிலைகுலைந்த அவர், பின்னர் சமாளித்துக் கொண்டார். லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.