ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர்
ரயிலில் பாய நின்ற நேரத்தில் போலீஸ் சொன்ன வார்த்தை.. அந்த நொடி மனம் மாறி வாழ நினைத்த இளைஞர் - வைரல் வீடியோ
கேரள மாநிலம் ஆலப்புழாவில், குடும்ப பிரச்சினையால் ரயில் முன் பாய்ந்து த*கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில், காணாமல் போன இளைஞரின் செல்போன் டவரை வைத்து அவர் இருக்கும் இடத்திற்கு சென்ற காவலர் நிஷாத், இளைஞர் த*கொலை செய்து கொள்ள தண்டவாளத்தில் நடந்து சென்றதை கண்டு அவரை காப்பாற்ற ஓடியுள்ளார். அப்போது காவலரின் குரல் கேட்டு இளைஞர் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால், ரயில் மோதி பலியாகாமல் உயிர் தப்பினார்.