சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது.