சிறைச்சாலை தேடி வந்த மகா கும்பமேளா புனித நீர்! - போட்டிப்போட்டு குளியல் போட்ட கைதிகள்
மகா கும்பமேளாவில் சிறை கைதிகளும் புனித நீராடும் வாய்ப்பை வழங்கியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்ட சிறைச்சாலை நிர்வாகம்...
மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் தொட்டியில் நிரப்பப்பட்டது.
அந்த நீரில் இருபால் சிறைக்கைதிகளும் புனித நீராடி மகிழ்ந்தனர்... “ஹர ஹர கங்கை“ என முழக்கங்கள் எழுப்பியபடி கைதிகள் புனித நீராடினர்... இந்த புனிதமான நிகழ்வில் தங்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு வழங்கிய சிறை நிர்வாகத்திற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.