கோ-கோ உலகக்கோப்பை - இந்திய மகளிர் அணி சாம்பியன்

Update: 2025-01-20 01:53 GMT

                                                          கோ-கோ உலகக்கோப்பை - இந்திய மகளிர் அணி சாம்பியன்


                       கோ-கோ (kho-kho) உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.

  • டெல்லியில் முதல் முறையாக கோ - கோ உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. மகளிர் பிரிவில் நடத்தப்பட்ட இறுதிப்போட்டியில் இந்தியாவும் நேபாளமும் பலப்பரீட்சை நடத்தின.
  • போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பிரியங்கா இங்லே தலைமையிலான இந்திய மகளிர் அணி, புள்ளிகளை குவித்தது. ஆட்ட நேர முடிவில் 78க்கு 40 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
  • இதன்மூலம், முதல் முறை நடைபெற்ற கோ - கோ உலகக்கோப்பையில் சாம்பியன் ஆகி இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்