Kerala | உயிர் காக்கும் உயிரே பிரிந்தது.. கேரளாவில் நொடியில் நடந்த சோகம்
கேரள மாநிலம் வைக்கம் அருகே கால்வாயில் கார் கவிழ்ந்ததில், அமல் சூரஜ் என்ற மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கால்வாயில் கார் மூழ்கி இருந்ததை கண்ட மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சோதனை செய்ததில் காரில் ஒருவர், இறந்து கிடந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருவது தெரிந்த நிலையில், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கார் இப்பகுதியை கடக்கும் போது கால்வாயில் விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.