கேரள மாநிலம் இடுக்கி அணையில் திடீரென படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 14 சுற்றுலாப் பயணிகள் சிக்கி கொண்டனர். இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் படகு நின்றுள்ளது. இதையடுத்து, படகில் இருந்து கயிறை தூக்கி வீசியதால் கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கயிறை பிடித்து இழுத்து படகை கரை சேர்த்தனர். திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக படகு நின்றதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.