Kerala | Accident | ஒரே நேரத்தில் 3 வாகனங்களை அடித்து தூக்கிய கார்..தூக்கி வீசப்பட்ட இளம்பெண்..
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பேர் காயம்- பதறவைக்கும் வீடியோ
கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகச் சென்ற கார், அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதியதில், 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். காஞ்சிரப்புவிழா பகுதியில் அதிவேகமாக சென்ற கார், முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்று, இருசக்கர வாகனம் உட்பட 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் உள்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து தொடர்பான பதைபதைக்கும் காட்சி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.