பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கொடூர தாக்குதல் - ஊரே சுற்றி நின்று பார்த்த அதிர்ச்சி

Update: 2025-01-29 12:04 GMT

கர்நாடகாவில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயச்சூர் (Raichur) மாவட்டம் ஜாலஹள்ளி கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண் தண்டம்மா என்பவரை, சிலர் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரங்கப்பா என்பவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அதற்கு தண்டம்மா தான் காரணம் என்று குற்றம் சாட்டி,

அவரை மரத்தில் கட்டி வைத்து, பசவராஜ் நாயக், யங்கம்மா உள்ளிட்ட 4 பேர் தாக்கினர். இதனை கிராம மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார், தண்டம்மாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்