கணவருக்கு கத்திக்குத்து - முதல்முறையாக மவுனம் கலைத்த கரீனா கபூர் சொன்ன வார்த்தை

Update: 2025-01-17 07:12 GMT

நடிகர் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில், யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என, அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர் தெரிவித்துள்ளார். மும்பையில் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அவரை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தான கட்டத்தை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த சவாலான சூழலை தாங்கள் கடந்து வருவதாக கூறியுள்ள கரீனா கபூர், புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்