CRPF வீரரை கீழே தள்ளி கொடூரமாக தாக்கும் கன்வாரியாக்கள் - தீயாய் பரவும் வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது கன்வாரியாக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் ஆண்டுதோறும் கன்வார் யாத்திரை மேற்கொண்டு, ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித இடங்களில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த வகையில், யாத்திரை மேற்கொண்ட கன்வாரியாக்கள் சிலர் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அப்போது ரயில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவரை தாக்கிய காட்சிகள் வைரலாகின.