JammuKashmir | பயங்கரவாத சதி? சிக்கிய 19 வயது இளைஞர் - மொபைலில் அதிர்ச்சி Data

Update: 2025-11-27 16:00 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பதிண்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் பயங்கரவாத செயலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் ஆன்லைன் வாயிலாக பயங்கரவாத செயலைச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் பிற வெளிநாடுகளை தளமாகக் கொண்ட சில செல்போன் எண்கள் இந்த இளைஞரின் மொபைல் போனில் இருந்ததாகவும், அவரது டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்