Jammu Kashmir Landslide Temple | அழகிய இடத்தை அலங்கோலமாக்கி 36 பக்தர்களின் உயிரை குடித்த ``பேரழிவு''

Update: 2025-08-28 03:44 GMT

ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது

கத்ரா பகுதியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள குகைக்கோயிலில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கியதை அடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே வானிலை பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால், மக்களின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என முதலமைச்சர் உமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார்...

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்