இந்திய மீனவர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதை மீனவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சர்வதேச கடல் எல்லை, மீன்வளம், வானிலை உள்ளிட்ட தகவல்கள் அந்த செயலியில் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.