அனுமனா?.. நீல் ஆம்ஸ்ட்ராங்கா? விண்வெளிக்கு முதலில் போனது யார்? - குழப்பிய பாஜக எம்பி

Update: 2025-08-25 03:29 GMT

அனுமன் தான் முதலில் விண்வெளிக்கு போனதாக பள்ளி குழந்தைகளிடம் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் பேசி இருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக எம்பி அனுராக் தாக்கூர் இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஒரு பள்ளிக்கு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். அப்போது, ​​விண்வெளிக்கு முதலில் பயணம் செய்தவர் யார் என்று குழந்தைகளிடம் கேட்டார். மாணவர்களோ நீல் ஆம்ஸ்ட்ராங் என்று கூற, குறுக்கிட்ட பாஜக எம்.பி அனுமன் தான் முதல் விண்வெளி வீரர் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்