சொந்த தேசத்துக்கே நம்பிக்கை துரோகம் செய்த இந்தியர் - இழுத்து சென்ற போலீஸ்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய டிஆர்டிஓ மேலாளர் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக டி.ஆர்.டி.ஓ. (DRDO) ஒப்பந்த மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் சிஐடி உளவுத்துறை, தேசவிரோத மற்றும் நாசவேலை நடவடிக்கைகள் குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, டி.ஆர்.டி.ஓ. மேலாளர் மகேந்திர பிரசாத் சிக்கியுள்ளார். அவர், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய தகவல்களை கசியவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.