India vs West Indies வெஸ்ட் இன்டீஸை மிரட்டிவிட்ட இந்தியா - ஆட்டத்தை விறுவிறுப்பாக்கிய கே.எல்.ராகுல்

Update: 2025-10-02 14:24 GMT

India vs West Indies வெஸ்ட் இன்டீஸை மிரட்டிவிட்ட இந்தியா - ஆட்டத்தை விறுவிறுப்பாக்கிய கே.எல்.ராகுல்

இந்தியா Vs வெஸ்ட் இன்டீஸ் - முதல் நாள் ஆட்டம் முடிவு

இந்தியா - வெஸ்ட் இன்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது..

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இன்டீஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஜஸ்டின் க்ரீவ்ஸ் Justin Greaves மட்டுமே அதிகபட்சமாக 32 ரன்கள் அடித்தார். 162 ரன்களில் அந்த அணி ஆட்டமிழந்தது. சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு, 121 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் அரை சதம் கடந்து களத்தில் உள்ளார். கேப்டன் சுப்மன் கில் 18 ரன்கள் அடித்து அவருடன் விளையாடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்