அவசர அவசரமாக ஓடிவந்த மோடி - 26 உயிர்களுக்கு பதில் சொல்ல தயாராகும் இந்தியா
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, ஒரு நாள் முன்னதாகவே அவசரமாக இந்தியா திரும்புகிறார்.