India | Pakistan | Indian Army | எல்லையில் பதற்றமா?.. இந்திய ராணுவம் வெளியிட்ட முக்கிய செய்தி
India | Pakistan | Indian Army | எல்லையில் பதற்றமா?.. இந்திய ராணுவம் வெளியிட்ட முக்கிய செய்தி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, துப்பாக்கி சூடு நடத்தியதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில், அதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. பூஞ்ச் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் குறித்து சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள இந்திய ராணுவம், கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்த போர் நிறுத்த மீறலும் நடக்கவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.