ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தாவி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதால், தாவி ஆற்றின் கரையோர மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.