மெல்போர்ன் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல் | இந்தியா கடும் கண்டனம்
மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் நுழைவாயில் பெயர்ப்பலகை மர்ம நபர்களால் வண்ணம் பூசி சேதப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக தலைநகர் கான்பெராவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆஸ்திரேலியா அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக கான்பெரா இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்து கோயில்கள் மற்றும் இந்திய தூதரகங்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பது இந்திய - ஆஸ்திரேலிய சமூகத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.