வெறும் 6 மாதத்தில் 2.2 லட்சம் நாய்க்கடிகள்.. 'இத்தனை மரணங்களா..?'வெளியான பகீர் ரிப்போர்ட்
கேரளாவில் 2025ம் ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ள நாய்கடி சம்பவங்கள் தலைசுற்ற வைக்கின்றன. கேரளா மாநிலம் முழுவதும் கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 2.2 லட்சம் நாய்கடி சம்பவங்களும், அதனால் 15 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனால் அச்சமடைந்து உள்ள கேரள மக்கள், இதில் கேரள அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தினமும் நாய்கடி சம்பவங்கள் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.