Tirupati Latest News | திருப்பதி தேவஸ்தானம் எடுத்த முக்கிய முடிவு

Update: 2025-06-18 07:52 GMT

ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகளை தேர்வு செய்து சிறைகளில் கைதிகளுக்கு பக்தி, நீதி போதனை வகுப்பு நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டமானது திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது தவறுகளை செய்து சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மனநிலையில் தேவையான மாற்றங்களை கொண்டு வர அவர்களுக்கு வாரத்தில் இரண்டு சனி கிழமைகளை தேர்வு செய்து பக்தி, வேதாந்த, நீதி போதனை வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான அனுமதியை அரசிடமிருந்து பெறவும், விரும்பும் பக்தர்களுக்கு மட்டுமே இந்த சேவையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்