Kerala | குறுக்கே வந்த பைக்.. ஆட்டோ கவிழ்ந்து ஸ்பாட்டிலேயே ஒருவர் பலி - அதிர்ச்சி CCTV
ஆட்டோ கவிழ்ந்து விபத்து - ஓட்டுநர் பலி - சிசிடிவி காட்சி
கேரள மாநிலம் பாலக்காட்டில், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க, ஆட்டோவை திருப்ப முயன்ற போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில், ஓட்டுநர் பிரகாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பயணிகள் காயமடைந்தனர். இந்நிலையில், பதைபதைக்க வைக்கும் இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.