இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.. உடனே பறந்த எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து
உணவகங்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், பிளாஸ்டிக்கில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உள்ளதாகவும், இனி எந்த உணவகங்களிலும் இட்லி தயாரிப்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினார். மேலும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்..