ICU Ward | ஜெய்ப்பூரில் தீக்கிரையான ICU வார்டு.. 6 நோயாளிகள் கொடூர சாவு.. 5 பேர் கவலைக்கிடம்
மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5 பேரின் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தீ விபத்து குறித்து அறிந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, விபத்துக்குப் பிறகான மருத்துவமனையின் நிலையை ஆய்வு செய்ய சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு வந்தார். தீ விபத்து குறித்து பேசிய ராஜஸ்தான் அமைச்சர் ஜவஹர் சிங் பெதம் “ இது துரதிர்ஷ்டவசமானது. ஐ.சி.யு வார்டில் இருந்த 24 பேரில், பெரும்பாலானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்“ என்று தெரிவித்தார்.