Madhyapradesh | கணவன் கதையை ஹனிமூனில் முடித்த ஆசை மனைவி...வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு
தேனிலவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹா ஆகியோரது நீதிமன்ற காவலை 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதி திருமணமாகி தேனிலவுக்கு ஷில்லாங் சென்றிருந்தனர். இந்த நிலையில், தனது காதலன் வழிகாட்டுதலின்படி, கூலிப்படையை வைத்து கணவன் ராஜா ரகுவன்ஷியை சோனம் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சோனம், அவரது காதலர் உட்பட 5 பேர் கைதாகி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.