உபி,யில் அசைவ உணவு விற்றதால் பிரபல கடையின் ஷட்டரை இழுத்து மூடிய இந்து அமைப்பினர்
புனித மாதத்தில் அசைவம் விற்க கூடாது என கூறி உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே ஹிந்து அமைப்பினர், பிரபல கடையை முற்றுகையிட்டு ஷட்டரை மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் சாவன் மாதத்தையொட்டி ஹிந்துக்கள் அசைவ உணவுகளை உண்பதை தவிர்ப்பது வழக்கம். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் இந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தின் அசைவ உணவு விற்பனை செய்யும் கடையை ஹிந்து ரக்ஷா தள் என்ற அமைப்பினர் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.