`படத்தில் Hero... நிஜத்தில் வில்லன்..' - பிரபல நடிகர் மீது நடிகை பாலியல் புகார்

Update: 2025-05-23 08:03 GMT

கர்நாடகாவில் மாடனூரு மனு என்ற நடிகர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு கன்னட சின்னத்திரையில் காமெடி கில்லாடி என்ற நிகழ்ச்சியின்போது அறிமுகமான துணை நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் பெங்களூரு போலீசார் அவரை கைதுசெய்துள்ளனர். அந்த பெண் அளித்துள்ள புகாரில் சிமோகா அழைத்துசென்றபோது மனு தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நடிகர் மனு கதாநாயகனாக நடித்த குலதல்லி கீழ் யாவுதே என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்